அஜித் படத்தில் கூட்டணி; மீண்டும் இணையும் பிரபுதேவா-நயன்தாரா

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என வலம் வருபவர் பிரபுதேவா.

சில காலங்களுக்கு இயக்குனராக இருந்தவர் தற்போது நடிகராக பிஸியாகி விட்டார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இப்படத்தில் அஜித் நடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

விரைவில் விஸ்வாசம் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இதனையடுத்து தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த இரு படங்களை முடித்துவிட்டு பிரபுதேவா இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிது.

இதில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

வில்லு படத்தில் நயன்தாராவை இயக்கியபோது பிரபுதேவா உடன் காதல் கைகூடியது.

அதன்பின்னர் திருமணம் வரை சென்று இந்த ஜோடிகள் திருமணம் செய்யாமல் பிரிந்துவிட்டனர்.

தற்போது இந்த படத்திற்காக இவர்கள் இணைவார்கள் என கூறப்படுகிறது.

நயன்தாராவின் கால்ஷீட் தேதிகளைக் கவனித்து வருபவர், தயாரிப்பாளர் கோட்டப்பாடி ராஜேஷ்.

அவர்தான் நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தைத் தயாரித்திருந்தார்.

தற்போது இந்த மூவர் இணையும் படத்தையும் அவரே தயாரிப்பார் என சொல்லப்படுகிறது.

சிம்புவை விட்டு பிரிந்த பின் சிம்பு உடன் இணைந்து பணிபுரிந்தார் நயன். எனவே பிரபுதேவாவுடன் இணைவதிலும் எந்த சிக்கலும் இருக்காது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புரொபஷன் வேறு, பர்ஷனல் வேறு என்பதே நயன்தாராவின் ரூட்டாம்.

LEAVE A REPLY