அஜித்தை பற்றி அவதூறாக ட்விட்டரில் எழுதினேனா? கருணாஸ் விளக்கம்

Ajith- karunas longஎன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறான கருத்துகளை வெளியிட்டுள்ளதாக வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது என்று நடிகர் கருணாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்டு துணைத் தலைவராக நடிகர் கருணாஸ் வெற்றி பெற்றுள்ளார்.

இதனிடையே, “நடிகர் சங்க கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடந்தால், அஜித்தை அழைப்பதில்லை. எந்த சிறு உதவிக்கும் அவர் வீட்டு வாசல் படியை மிதிக்கக் கூடாது” என்று நடிகர் கருணாஸின் ட்விட்டர் பக்கத்தில் இப்படி ஒரு கருத்து வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள கருணாஸ், “என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறாக செய்திகளை கூறியதாக செய்தி வெளிவந்திருக்கிறது. இது முற்றிலும் தவறான செய்தியாகும். யாரோ விஷமிகள் என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இப்படி ஒரு தவறான முறையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்.

ஆரம்ப காலகட்டம் முதல் இன்று வரை நான் அனைத்து நடிகர், நடிகைகளுடன் நட்பாக பழகி வந்து கொண்டிருக்கிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதமோ, காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வந்ததை அறியும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது பற்றி போலீஸ் கமிஷனரிடம் முறையாக புகார் அளிக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY