அஜித்துடன் நடிக்க விருப்பம் தெரிவித்த அமலாபால்!!

நடிகை அமலாபால் அஜீத்துடன் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் விஜய்யுடன் விவாகரத்து பெற்ற பின்னர் நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஐபி 2’ படத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் விக்ரம், விஜய்யுடன் இணைந்து நடித்து விட்டேன். இதற்கு முன்னர் அஜீத்துடன் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

ஆனால், சில காரணங்களால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

விரைவில் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY