அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வாகிறார் ராகுல் காந்தி; வேறு யாரும் வேட்புமனு தாக்கல் இல்லை

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக இருந்த ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான போட்டியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை முன்மொழிந்து 89 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த பதவிக்கு வேறு யாரும் இதுவரை வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

எந்த போட்டியும் இல்லை என்பதால் ராகுல் காந்தி டிசம்பர் 11 ந்தேதி காங்கிரஸ் தலைவராக தேர்ந்து எடுக்கப்படுவார்.

LEAVE A REPLY