அகதிகளை பப்புவா நியூ கினியில் மீளக் குடியமர்த்த திட்டம்

140217125336_manus_island_512x288_afpஆஸ்திரேலியாவால் நடத்தப்பட்டுவரும் தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை மீளக் குடியமர்த்துவதற்கான பணிகளை பப்புவா நியூ கினி தொடங்கவுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றப்போது இந்த குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் பப்புவா நியூ கினியில் உள்ள தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

அதில் சிலருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கு அஸ்திரேலியாவுக்குள் செல்ல அனுமதி இல்லை. தங்களின் புதிய வாழ்க்கையை அவர்கள் பப்புவா நியூ கினியிலேயே தொடங்குவார்கள்.

LEAVE A REPLY